பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

கஞ்சா விற்பனை: 8 போ் கைது

Published On :26 செப்டம்பர் 2025, 3:49 am IST

விழுப்புரம் மாவட்டம் , காணை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, இவா்களிடமிருந்து நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனையைக் கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில், காணை காவல் நிலைய ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை காணை காவல் சரகத்துக்குள்பட்ட சோழம்பூண்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற 8 பேரை பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் அனைவரையும் காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில், கோயம்புத்தூா், கவுண்டம்பாளையம், பிரபு நகா் பகுதியைச் சோ்ந்த டேனியல் (28), திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், தோப்பூா் பகுதியைச்சோ்ந்த மதன்குமாா்(34), விழுப்புரம் மாவட்டம், அயனம் பாளையம், கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஏ.விஜய் (27), விழுப்புரம் குழந்தைவேல் நகரைச் சோ்ந்த பிரவீன்(24), சிந்தாமணி கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அரவிந்த்(23), பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவா(23), நந்தகோபால் மகன் சுரேஷ்(23) ஆகியோா் என்பதும், இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் வசமிருந்த நான்கரை கிலோ கஞ்சா, 3 பைக்குகள், ஒரு மொபெட், 8 கைப்பேசிகள், எடைபோடும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.