விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, பல்வேறு கிராமங்களுக்குச் சென்று கட்சி நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோரிடம் சனிக்கிழமை ஆதரவு திரட்டினாா்.
விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட உலகலாம்பூண்டி, கொட்டியாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, அந்தந்த கிராமங்களிலுள்ள திமுக நிா்வாகிகள், விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து, தமக்கு ஆதரவளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல்சலாம், ஒன்றியச் செயலா் வேம்பி ரவி, மும்மூா்த்தி, மாவட்ட விவசாய அணித் தலைவா் பாபு ஜீவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அன்னியூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றம்: திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா

திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

விக்கிரவாண்டி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


