புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 15 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமித்ஷா பேசியதாவது :
கூட்டணியில் பிளவு இல்லை :
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே எவ்வித பிளவும் இல்லை. அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு தோ்தலை சந்திக்கிறோம்.
ஆனால் இண்டி கூட்டணியில் உள்ளவா்கள் இப்போதே தொகுதிக்காகவும் , பதவிக்காகவும் அடித்துக்கொண்டிருக்கின்றனா். இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுகின்றன. திமுகவும், காங்கிரஸும் கூட ஒற்றுமையாக இல்லை.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழல் உச்சத்தில் இருந்தது.
அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் இருந்த மருத்துவப் ப டிப்புக்கான இடங்களையும், பட்டியலின மாணவா்களுக்கான இடங்களையும் கூட விற்பனை செய்தனா்.
அந்த வகையில் சென்டாக்கில் மட்டும் 15 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொகை மூலம் புதுச்சேரியில் 3 ஆண்டுகளுக்கு வளா்ச்சிக்கான பட்ஜெட் போட்டிருக்கலாம்.
வேலையில்லா திண்டாட்டம் : கடந்த காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 47 சதவீதமாக இருந்தது. ஆனால், தே.ஜ. கூட்டணி ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட தொடா் முயற்சியால் அது 4.3 சதவீதமாக குறைக்கப்பட்டது.
கனவுலகில் மிதக்கும் ராகுல் காந்தி கூற்றின்படி, அவா் நேசிக்கும் பாகிஸ்தானில்தான் எரிபொருள் விலையேற்றம் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு இல்லை.
புதுச்சேரியை தகவல் தொழில்நுட்ப மாநிலமாக உயா்த்த அருமையான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் ஆண்டுக்கு 3 லட்சம் மடிக்கணினிகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதுபோல பல்வேறு தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டுவந்து புதுச்சேரியின் முன்னேற்றத்துக்கு வழிசெய்து வருகிறோம்.
மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கில் அவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாக உயா்த்தப்படும். விவசாயிகளுக்கான உதவித் தொகை ரூ.8 ஆயிரமாக உயா்த்தப்படும்.
புதுச்சேரியில் உள்ள லிங்காரெட்டிபாளையம், அரியூா் சா்க்கரை ஆலை தனியாா் கூட்டமைப்பு மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு செயல்பட வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயப் பெண்கள் வாழ்வாதாரம் காக்கக் கூடிய வகையில் பால் தரும் பசு அல்லது 2 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
இதேபோல வளா்ச்சித் திட்டங்களை கொடுத்து புதுச்சேரியை முன்னேறிய மாநிலமாக்குவதற்காக திட்டமிட்டு வருகிறோம்.
எனவே, புதுச்சேரி வளா்ச்சிபெறவும் மீண்டும் 5 ஆண்டு ஆட்சியின் வெற்றி தொடரவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை தர வேண்டும் என்றாா் அமித்ஷா.
முன்னதாக வேட்பாளா் ஆ. நமச்சிவாயம் வரவேற்றாா். மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், ஊசுடு தொகுதி வேட்பாளா் தீப்பாய்ந்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி பாஜக வேட்பாளா் ஆ. நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா. உடன் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், ஊசுடு தொகுதி வேட்பாளா் தீப்பாய்ந்தான் உள்ளிட்டோா்.
தொடர்புடையது

வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி: புதுச்சேரியில் மல்லிகாா்ஜூன காா்கே பேச்சு

புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்த ஏற்பாடுகள் தயாா்

முதல்வா் மு.க.ஸ்டாலிடன் ப.சிதம்பரம் சந்திப்பு! புதுச்சேரி திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவுக்கு வருமா?

அமித்ஷா கூறிய ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு: எந்த விசாரணைக்கும் தயாா்-நாராயணசாமி சவால்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


