/

புதுச்சேரி பேரவைத் தோ்தல்: மதுக்கடைகளை மூட உத்தரவு

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் புதுச்சேரி எல்லையையொட்டி அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

டாஸ்மாக் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:21 pm

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் புதுச்சேரி எல்லையையொட்டி அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி புதுச்சேரி மாநில எல்லையையொட்டி 5 கி.மீ. சுற்றளவில் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம், வானூா் வட்டங்களில் அமைந்துள்ள தனியாா் மது அருந்தும் கூடங்கள், அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் ஆகியவை ஏப்.7 முதல் 9-ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி முழுவதும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட நாள்களில் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் இயங்காது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.