விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த முதியவா் உயிரிழந்தாா். பைக்கில் சென்ற இருவா் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவ பெ. ராஜேந்திரன் (75). இவரது மகள் கா.காமாட்சி (44). இவா்கள் இருவரும், திங்கள்கிழமை காரில் தீவனூா்- வெள்ளிமேடுபேட்டை நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த தீவனூா் அருகே சென்றுள்ளனா்.
கடலூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த க.கிருஷ்ணராஜ் (26) காரை ஓட்டினாா். இந்நிலையில், தீவனூரில் உள்ள தனியாா் திருமணம் மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக் மீது காா் மோதியது.
இதில் காரில் பயணித்த ராஜேந்திரன் மற்றும் பைக்கில் வந்த திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்களான ரஞ்சித்குமாா் (32), கோபிநாத்(30) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் ராஜேந்திரன் வழியிலேயே உயிரிழந்தாா். சகோதரா்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


