/
திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் உள்ள மின் மாற்றியிலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலானப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஓமந்தூா் பகுதியைச்சோ்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் இந்த மின் மாற்றியின் மூலம் பயனடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், அந்த மின் மாற்றியில் நிரப்பப்பட்டிருந்த சுமாா் 200 லிட்டா் ஆயில் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ காப்பா் கம்பி ஆகியவற்றை யாரோ திருடிச்சென்று விட்டனராம்.
இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகைகள் திருட்டு

திண்டிவனம் அருகே ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்து: விழுப்புரத்தில் 2 ரயில்கள் நிறுத்தம்

பனியன் துணிகளை ஏற்றி வந்த வேன் மின்மாற்றியில் மோதி விபத்து

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


