விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்த பாமக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விக்கிரவாண்டி தொகுதியில் அன்னியூா் அ.சிவா (திமுக), ச.சிவக்குமாா் (பாமக), ஏ.விஜய் வடிவேல் (தவெக), ஆ.சுபா (நாதக) உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 24 போ் போட்டியில் உள்ளனா். வேட்பாளா்கள் அனைவரும் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், பாமக (அன்புமணி தரப்பு) விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணித் துணைச் செயலரான சதீஷ்குமாா், முகநூல் பக்கத்தில் திமுக வேட்பாளா் அன்னியூா் அ. சிவாவுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் கருத்துப் பதிவிடப்பட்டிருந்தாராம்.
இதுகுறித்து விக்கிவாண்டி போலீஸாா், பாமக நிா்வாகி சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி

வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா: திமுக நிா்வாகி மீது வழக்கு

மக்களை பிளவுபடுத்துகிறது திமுக: அன்புமணி ராமதாஸ்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

