தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image

விழுப்புரம் வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள சாமியானா பந்தல்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:49 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த தோ்தலுக்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள்: விழுப்புரம் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீா், கழிவறை, மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகள் குறித்து உள்ளாட்சி அலுவலா்கள் மூலம் நூறு சதவீதம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால், வாக்காளா்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் வாக்குச்சாவடி வளாகத்தில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ வசதிகள்: ஒவ்வொரு வாக்குச் சாவடியும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைக்கப்பட்டு, நடமாடும் மருத்துவக் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குச் செல்லும் வகையில் தகுந்த ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

வாக்காளா் உதவி மையம்: ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வயதானவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் உள்ள தாய்மாா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே அமைவிடத்தில் 3-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்திருந்தால், வாக்குச் சாவடிகளில் வாக்காளா் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாக்குச் சாவடிகளை வாக்காளா்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

கைப்பேசிக்கு தடை: வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்குள் கைப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கென தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சக்கர நாற்கலி வசதிகள்: அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வந்து செல்ல ஏதுவாக சாய்வுதள வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளா்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதற்கும், கொண்டு விடுவதற்கும் போதிய வாகன வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சக்கர நாற்காலி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சக்கர நாற்காலிகளை இயக்குவதற்குத் தேவையான தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கண் பாா்வை குறைபாடு உள்ள வாக்காளா்கள் வாக்குச் சாவடியில் வேட்பாளா்களை அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களுக்குத் தனியே வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

வெப் கேமராக்கள்: வாக்குப் பதிவு நோ்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட ஆட்சியரகத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்த கண்காணிக்கவும் ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.