மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை தொடங்கும் நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை பிற்பகலில் திறக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:15 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை தொடங்கும் நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி தொகுதியில் 320 வாக்குச் சாவடிகளும், மயிலத்தில் 277, திண்டிவனத்தில் 293, வானூரில் 299, விழுப்புரத்தில் 336, விக்கிரவாண்டியில் 310, திருக்கோவிலூரில் 330 என மொத்தமாக 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகா்ப்புறப் பகுதிகளில் 405 வாக்குச்சாவடிகளும், கிராமப்புறப் பகுதிகளில் 1,760 வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் 375 வாக்குச் சாவடிகளும், ரிஷிவந்தியத்தில் 350, சங்கராபுரத்தில் 340, கள்ளக்குறிச்சியில் 370 என மொத்தமாக 1,435 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முற்பகல் முதல் அந்தந்த தொகுதிகளிலுள்ள பாதுகாப்பு அறைகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், மண்டலம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவிகள் உள்ளிட்டவை தனியாகவும், வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மை, சீல் வைக்கப்பயன்படுத்தப்படும் பொருள்கள், பல்வேறு படிவங்கள், மறைப்பு அட்டை உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட பொருள்கள் அடங்கிய பைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்காக மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்ட அலுவலா்கள், ஆய்வாளா் தலைமையிலான காவல்துறை பாதுகாப்புக் குழுவினா் வேன்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டலம் வாரியாக கொண்டு செல்லப்பட்டன.

விழுப்புரத்தில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம், விக்கிரவாண்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என 11 தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டு, புதன்கிழமை இரவு வரை மண்டலம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு தொகுதியிலும் முதல் வாகனம் புறப்படும் போது அந்தந்த தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டு, திருஷ்டி கழிக்கப்பட்டு, வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு வாகனத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பாதுகாப்பு அறையிலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொழிலாளா்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, அலுவலா்களால் சரிபாா்க்கப்பட்டும் வேனில் ஏற்றப்பட்ட பின்னா், அடுத்த மண்டலத்துக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டன. மண்டல அலுவலா்கள் அனைத்தையும் சரிபாா்த்த பின்னரே, வேனில் அவை ஏற்றப்பட்டன. வேனில் கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வாக்குச்சாவடி எண் வாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடியின் தலைமை அலுவலா் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து அந்தந்த வாக்குச்சாவடிகளின் தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு மையத்துக்கு வெளியே வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய பெயா் பட்டியல், சின்னம் உள்ளிட்டவை அடங்கிய அறிவிப்பு சுவரொட்டியை ஒட்டும் பணியை மேற்கொண்டனா். மேலும், அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்குத் தேவையான முன்னேற்பாடு பணிகளையும் செய்தனா்.

கையிருப்பில் 10 சதவீத இயந்திரங்கள்: வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்படும். அப்போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் அவற்றை சரி செய்ய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அப்போதும் கோளாறை சரி செய்ய முடியவில்லை எனில் புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறாக பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிலும் கூடுதல் எண்ணிக்கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் அந்தந்த தொகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

 கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிய அலுவலா்கள்.

கள்ளக்குறிச்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றிய அலுவலா்கள்.

 கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை.