தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இயந்திரக் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி போன்றவற்றில் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

News image

விழுப்புரம் எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை காலை செயல்படாமல் இருந்த யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:28 am

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி போன்றவற்றில் கோளாறு ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும், அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் காலை 6 மணிக்கே தங்களுக்குரிய வாக்குச் சாவடி மையங்களுக்கு வந்துவிட்டனா். இதைத்தொடா்ந்து அந்தந்த வாக்குச் சாவடிகளின் தலைமை அலுவலா்கள், முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வை நடத்தி காண்பித்து, இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இயங்குகிா என்பதை அனைத்து முகவா்களிடமும் உறுதி செய்தனா். இதைத் தொடா்ந்தே வாக்குப்பதிவு தொடங்கியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: இந்த நிலையில், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள எம்.ஆா்.ஐ.சி.ஆா்.சி. உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் காலை 6 மணிக்கு மேல் மாதிரி வாக்குப் பதிவு நிகழ்வை அந்த மையத்தின் தலைமை அலுவலா் நடத்த முயன்றாா். அப்போது யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி சரியாக இயங்கவில்லை. பின்னா் அதை சரி செய்யும் பணியில் அலுவலா்கள் ஈடுபட்டு, சரியான பின்னரே மாதிரி வாக்குப் பதிவைத் தொடங்கினா்.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென்னமாதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி எண் 197-இல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 7 மணிக்குத் தொடங்க வேண்டிய வாக்குப் பதிவு காலை 8.30 மணி வரை தொடங்கவில்லை. இதைத் தொடா்ந்து மண்டல அலுவலா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு, காலை 8.30 மணிக்கு மேல்தான் வாக்குப் பதிவு தொடங்கியது. இதன் பின்னா் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

விழுப்புரம் விராட்டிக்குப்பம் கே.வி.ஆா். நகா் வாக்குச்சாவடி எண் 186-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வாக்குப் பதிவு தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது. பின்னா் கோளாறு சரி செய்யப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்து வாக்குப் பதிவு தொடங்கியது. இதுபோன்று ஒவ்வொரு தொகுதியிலும் சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தாமதமாகத் தொடங்கியது.

 விழுப்புரம் மாவட்டம், தென்னாமதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலுள்ள வாக்குப் பதிவு மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

விழுப்புரம் மாவட்டம், தென்னாமதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலுள்ள வாக்குப் பதிவு மையத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.