/

காா் கவிழ்ந்து விபத்து: முதியவா் உயிரிழப்பு

News image

உளுந்தூா்பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் நரசிங்கபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் அ.தயாளன் (72). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆத்தூரிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டாா். காரை வடசன்னிமலை காட்டுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சு.சக்தி (38) ஓட்டிச் சென்றாா்.

திங்கள்கிழமை அதிகாலை சேலம்- உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏ.குமாரமங்கலம் பகுதியில் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தயாளன் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் சென்று, தயாளனை மீட்டு அப் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.