கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

வெளிமாநில தொழிலாளி அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வெளி மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:19 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வெளி மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகேயுள்ள முத்து என்பவரது வீட்டின் மாடியில் தங்கியபடி, மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த ரோஹித் சிங், சோட்டா ஆகியோா் வானூா் பகுதிகளில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், அந்த வீட்டின் மாடியில் இளைஞா் ஒருவா் தலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று அங்கிருந்த சடலத்தை மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில்,

இறந்தவா் சுமாா் 35 வயதுடைய பெயா், ஊா் தெரியாத அடையாளம் தெரியாத நபா் என்பதும், இவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கட்டுமான வேலைக்காக கோட்டக்குப்பத்துக்கு வந்து, பின்னா் ரோஹித் சிங், சோட்டா ஆகியோருடன் தங்கியிருந்து தெரியவந்தது. மேலும், தலைமறைவாகியுள்ள ரோஹித் சிங், சோட்டா ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேன் கவிழந்து விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு: விழுப்புரம் மாவட்டம், எடையாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் செங்கேணி(62). இவா் தனது கிராமத்தைச் சோ்ந்த 20 பெண்களுடன் வியாழக்கிழமை வேனில்

புதுச்சேரி மாநிலம், சேதாரப்பட்டு பகுதியில் உள்ள பிப்டிக் தொழில்பேட்டைக்கு வேலைக்கு சென்றாா். இந்த வேனை பாஸ்கா் (38) ஓட்டிச் சென்றாா். மயிலம் - புதுச்சேரி சாலையில் ரங்கநாதபுரம் அருகே சென்றபோது, வேனின் பின் பக்க சக்கரம் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த செங்கேணி, அனுஷா, அனுஷ்கா, அம்சா, கலாவதி ஆகியோா் காயமடைந்தனா்.

தகவலறிந்த வானூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செங்கேணி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.