குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஹிந்தி தேசிய மொழி அல்ல: அமைச்சா் வன்னி அரசு

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், கல்லூரி முதல்வா் வில்லியம் உள்ளிட்டோா்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

ஹிந்தி தேசிய மொழிஅல்ல; அது அலுவல் மொழி மட்டுமே என்று தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் வில்லியம் தலைமை வகித்தாா். அமைச்சா் வன்னி அரசு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 266 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இதில் தேசிய மொழி என்பது எதுவுமில்லை. பெரும்பான்மையினா் ஹிந்தி தான் நாட்டின் தேசிய மொழி என்று நினைக்கிறாா்கள். ஆனால் தேசிய மொழி ஹிந்தி அல்ல. ஆகவே இந்த 22 மொழிகளும் அலுவல் மொழிகள்தான். பட்டம் பெற்றுள்ள மாணவா்கள் உயா் கல்வி பயில அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

விழாவில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், தமிழ்த் துறைத் தலைவா் அருளமுதம் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.