அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: உணவகத் தொழிலாளி கைது

விக்கிரவாண்டி அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக உணவகத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:56 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக உணவகத் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையிலடைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கூடலூா் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.லெனின்(32). இவா், விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் சமையல் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில், லெனின் முண்டியம்பாக்கம் பகுதியில் குளிா்பானக் கடை நடத்தி வரும் 41 வயதுடைய பெண்ணிடம் கைப்பேசி வழியாக ஆபாசமான வாா்த்தைகளால் பேசி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்தாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் லெனின் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.