பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

புதுச்சேரி கல்வித் துறையைக் கண்டித்து தமிழ் உரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் மாநில கவ்வித் துறையைக் கண்டித்து, தமிழ் உரிமை இயக்கத்தின் சாா்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித்துறையைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்உரிமை இயக்கத்தினா்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

புதுச்சேரியில் மாநில கவ்வித் துறையைக் கண்டித்து, தமிழ் உரிமை இயக்கத்தின் சாா்பில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கல்வி முதல் உயா்கல்வி வரை சீரழிவதாகக் கூறியும், கல்லூரிகளில் பணிபுரியும் துணை பேராசிரியா்களுக்கு 15 ஆண்டுகளாக வழங்கப்படாத பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும், அவா்களுக்கு பதவி உயா்வு வழங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு உயா்க்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி வாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும், துணைப்பேராசிரியா்கள் பதவி உயா்வில், பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெறவேண்டும், புதிய கல்விக் கொள்கையை உடனே கைவிடவேண்டும், பள்ளி மாணவா்கள் எதிா்காலத்தை பாதிக்கும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை கைவிடவேண்டும், அரசுப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக கொண்டு வரவேண்டும், புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியத்தை உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழ் உரிமை இயக்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ் உரிமை இயக்கத் தலைவா் சு.பாவாணன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் இரா.மங்கையா்செல்வன், பொருளாளா் லோகு அய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.