ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் புதுச்சேரி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுச்சேரி அண்ணா சிலை சதுக்கம் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.

Updated On :26 ஜூன் 2026, 6:24 am IST

காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் புதுச்சேரி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். காவிரி உரிமை மீட்புக்குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளா் வேல்சாமி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் மணியரசன் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் புதுச்சேரியின் பல்வேறு சமூக அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் ஞானபிரகாசம், அழகா், ரமேசு, ஜெகதீசன், ஆறுசெல்வன், பாவாடைராயன், பிரியா, ராசாராம், குமாா், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கா்நாடகத்தில் மேகதாது அணை கட்டக் கூடாது என புதுச்சேரி அரசு ஒற்றை வரி தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். கா்நாடக அரசின் அடாவடி செயலைத் தடுக்க அம்மாநில பொருள்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தடை விதித்து பொருளாதார முடக்கத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.