காவிரி ஆற்று நீர்ப் பங்கீட்டு பிரச்னை, மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்குரைஞராகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மோகன் வி.காடர்கி கூறியது:
'காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007-இல் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அதன்மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடும்படி 2018-இல் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டுலு நீர் அளவீட்டு மையத்தில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் நடுவர் மன்றம் நிர்ணயித்த விகிதாச்சார தண்ணீரை திறந்துவிட வேண்டியது கர்நாடக அரசின் சட்ட கடமையாகும்.
அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்த உத்தரவை அமல்படுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் கர்நாடகத்துக்கு வழங்கப்படவில்லை. எனவே, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கோ, தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீரைத் தவிர, எஞ்சியுள்ள உபரிநீரைப் பயன்படுத்திக்கொள்ளவோ கர்நாடகத்துக்கு எந்தத் தடையும் இல்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தனது எல்லைக்குள் மேக்கேதாட்டு அணை அல்லது வேறு அணை கட்டவும், உபரிநீரைப் பயன்படுத்தவும் கர்நாடகத்துக்கு முழு உரிமை உள்ளது.
பற்றாக்குறை ஆண்டில், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மேக்கேதாட்டு அணை திட்டம்தான் ஒரே தீர்வு என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருப்பது சரியான கருத்தாகும். ஒருவேளை மழை பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில், ஜூன், ஜூலை மாதங்களில் பயன்படுத்திக்கொள்வதற்கு, மேக்கேதாட்டு அணையில் தொடர் கையிருப்பு நீராக 13 டி.எம்.சி.யை சேமித்து வைக்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
நிகழ் நீர் ஆண்டில், 9.5 டி.எம்.சி. தண்ணீர் தரவில்லை என்று தமிழ்நாடு அரசு புகார் அளித்திருந்தது. ஒருவேளை மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டிருந்தால், இந்தப் பற்றாக்குறையை தொடர் நீர் கையிருப்பின் மூலம் எளிதாகச் சமாளித்திருக்க முடியும். கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுவதுபோல, மேக்கேதாட்டு அணை திட்டம் தமிழ்நாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்கும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார்

மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கை நிராகரிப்பு?

மேக்கேதாட்டு எனும் மாயவலை!

நீர் உரிமை நீர்த்துப் போகலாகாது!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



