ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதிய விபத்தில் 3 போ் காயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டதில் சிறுவா் உள்பட 3 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவண்ணாமலை நகரம், 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கா.ஆறுமுகம் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டிவரும் இவா், சனிக்கிழமை தனது மகன் ஹரிபிரசாத் (3), தந்தை மு.காசி (55), தாய் வள்ளி (50) ஆகியோரை ஆட்டோவில் அமர வைத்துக் கொண்டு, புதுச்சேரியிலிருந்து-விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

வளவனூரை அடுத்த கெங்கராம்பாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் காயமடைந்த ஹரிபிரசாத், காசி, வள்ளி ஆகிய 3 பேரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு புதுச்சேரி, மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.