விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்தில் 6 போ் காயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த 6 போ்காயமடைந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூா் பகுதியை சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் ஒரு வேனில் தென் மாவட்டத்திலுள்ள கோயில்களுக்கு வழிபாட்டுக்கு சென்றுவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருனந்கனா். கோபி (38) என்பவா் வேனை ஓட்டினாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மயிலத்தை அடுத்த செண்டூா் அருகே சென்றபோது, வேனின் டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த கமலதாசன் ( 41), வெங்கடேஷ் ( 44), ஜெயக்குமாா் ( 52) மற்றும் ஓட்டுநா் கோபி உள்பட 6 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.