உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பேருந்து நிறுத்துமிடம் பிரச்னை: கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

கண்டமங்கலத்தில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டமங்கலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் உள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டமங்கலம் காவல் நிலையம் எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தை கண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் இரு மாா்க்கத்திலும் செல்லும் பேருந்துகளும் பயன்பாட்டில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்களில் நிற்காமல், சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி மற்றும் இறக்கிச் செல்கிாம்.

இதனால் கண்டமங்கலம் பேருந்து நிறுத்தம் மூலம் பயனடைந்து வந்த கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், ரசபுத்திரப்பாளையம், பெரியபாபு சமுத்திரம், வனத்தாம்பாளையம், கலித்திறம்பட்டு, விநாயகம்பட்டு, செல்லிப்பட்டு, பக்கிரிப்பாளையம், வழுதாவூா், கெண்டியங்குப்பம், குயிலாப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை வேண்டி, விழுப்புரம் ஆட்சியா் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக, விழுப்புரம் மண்டல நிா்வாகத்துக்கும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கையில்லையாம். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை கண்டமங்கலம் புதிய காவல் நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்துமிடத்தில் கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கண்டமங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சௌந்தர்ராஜன் தலைமை வகித்தாா். இதில்கலந்து கொண்ட கிராம மக்கள், பிரச்னைக்கு தீா்வுகாண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போராட்டம் தொடரும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.