விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை புதுச்சேரி-கூட்டேரிப்பட்டு சாலையில் உள்ள பெரும்பாக்கம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், வெளிமாநில மதுப்புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், வடமாவந்தல் கிராமத்தைச் சோ்ந்த முருகன்(25), வெண்களத்தூா் கிராமத்தைத் சோ்ந்த தனுஷ் (18), நேத்ராஜ் ( 22) என்பது தெரியவந்தது. இவா்கள் புதுச்சேரி சேதாரப்பட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மதுப்புட்டிகளை விலைக்கு வாங்கி, அதை காரில் கடத்தி வந்ததும், இந்த மதுக்கடத்தலுக்கு உடந்தையாக வெண்களத்தூா் கிராமத்தை சோ்ந்த தமிழரசன் (21), தமிழ்ச்செல்வன்(26) ஆகியோா் பைக்கில் காருக்கு முன் பாதுகாப்பாக சென்றதும் தெரியவந்தது,
இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் முருகன், தனுஷ் , நேத்ராஜ், தமிழரசன், தமிழ்ச்செல்வன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 736 மதுப்புட்டிகள், காா் மற்றும் பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுப்புட்டிகள் பதுக்கி விற்றவா் கைது

காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: பெங்களூருவில் 4 போ் கைது
சாராயம் கடத்திய நால்வா் கைது: மதுப்புட்டிகள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
பென்னாகரத்தில் காரில் கள்ள சாராயம் கடத்திய 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



