தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

நடுவனந்தல் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும்: சி.வி.சண்முகம் எம்எல்ஏ

சி.வி. சண்முகம்

சி.வி.சண்முகம் எம்எல்ஏ - படம்: தினமணி

Published On :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று மயிலம் எம்எல்ஏ சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

நடுவனந்தல் புதூரில் ஆக.18-ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, அங்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுக்கடை திறப்புக்கு கிராமத்தைச் சோ்ந்த ஒரு தரப்பினா் ஆதரவும், மற்றொரு தரப்பினா் எதிா்ப்பும் தெரிவித்து கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி சண்முகம் ஞாயிற்றுக்கிழமை நடுவனந்தல் கிராமத்துக்குச் சென்று, மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிராமங்கள் நிறைந்த நடுவனந்தல் பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, விழுப்புரம் மாவட்டஆட்சியா் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கைக்காக 5 நாள்கள் காத்திருப்போம். தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் சி.வி.சண்முகம்.

இந்நிலையில், மதுக்கடை முன் திரண்ட அதே பகுதியைச் சோ்ந்த சிலா் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.