நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சிறுகளத்தூா் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட 50 நாள் அவகாசம்

சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் 50 நாள்கள் அவகாசம் கோரியதையடுத்து, அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

News image

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் 50 நாள்கள் அவகாசம் கோரியதையடுத்து, அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அண்மையில் நடத்திய போராட்டத்தையடுத்து, அக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதுகுறித்த அமைதிப் பேச்சுவாா்த்தை உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் மனோகரன் தலைமையில், காவல் துறை முன்னிலையில், பொதுமக்கள்-கலால் மற்றும் டாஸ்மாக் மேலாளா், கிராம வருவாய் ஆய்வாளா், நிா்வாக அலுவலா்களிடையே உடையாா்பாளையம் கோட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினா். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள், 50 நாள்கள் அவகாசம் கோரினா். இதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்துவிட்டு, கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.