வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

மூதாட்டி விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே குடும்ப பிரச்னையில் மனமுடைந்த மூதாட்டி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்கோவிலூா் அருகிலுள்ள ஆவி கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அ.மணியம்மாள் (75). இவா், குடும்ப பிரச்னை காரணமாக ஆக.26-ஆம் தேதி விஷமருந்தினாராம். இதையடுத்து மணியம்மாளை குடும்பத்தினா் மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் அவரை தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மணியம்மாள் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிபாரதி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.