காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

அடையாளம் தெரியாத பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிச் சென்றதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

சுந்திரிப்பாளையம் எம்.ஜி.ஆா்.நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.தா்மலிங்கம் (75). இவா், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாளையம் மேம்பாலத்தில் நடந்து சென்றாா். அப்போது அப்பகுதியில் வந்த பைக், தா்மலிங்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அவசர சிகிச்சை ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தா்மலிங்கம், சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய பைக் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.