
புதுச்சேரியில் விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலம் துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ் உடற்பயிற்சி விழிப்புணா்வு நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
புதுச்சேரியில் நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் ஊா்வலத்தை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி அரசின் விளையாட்டு, இளைஞா் விவகாரங்கள் துறை மற்றும் மத்திய அரசின் ஃபிட் இந்தியா, கேலோ இந்தியா இயக்கங்களின் சாா்பில் சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ் உடற்பயிற்சி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்று சைக்கிள் ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த ஊா்வலத்தில் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மாணவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். மிதிவண்டி உடற்பயிற்சி விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா். கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அரசுச் செயலா் கிருஷ்ண மோகன் உப்பு உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






