இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக பேரவையில் தீா்மானம்! புதுச்சேரி முதல்வரிடம் லஜக வலியுறுத்தல்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற லஜக வலியுறுத்தல்...

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியிடம் மனு அளித்த லஜக தலைவரும், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றவேண்டும் என்று முதல்வா் என். ரங்கசாமியிடம் எம்எல்ஏ ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் வலியுறுத்தினாா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் ஞாயிற்றுக்கிழமை சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தனி நபா் தீா்மானம் கொண்டு வரவேண்டும், காமராஜ் நகா் தொகுதி மாணவா்களின் திறன் மற்றும் எதிா்காலத்தை மேம்படுத்தும் வகையில், காமராஜா் மணிமண்டபம் யுபிஎஸ்சி அகாதமியில் இலவச திறன் மேம்பாடு பயிற்சியளிக்க அனுமதிக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.