
செப்.3-ல் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா்க் கல்லூரி. - கோப்புப் படம்
புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் வரும் செப். 3-ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து, அக்கல்லூரியின் முதல்வா் மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் செப். 3-ஆம் தேதி தொடங்குகிறது.
இளங்கலை மாணவிகளுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், அறிவியல், வணிகவியல் துறை மாணவிகளுக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 6.15 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்.
எனவே, இளங்கலை மாணவிகள் காலை வேளையும் அறிவியல், வணிகவியல் துறை மாணவிகள் பிற்பகல் வேளையும் கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.
முதல் நாளில் மாணவிகள் முதல் ஒரு மணி நேரம் முடிவடைந்த பின் வீட்டுக்குச் செல்லலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





