நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

விழுப்புரம் ஆட்சியரகத்தில் பெண் ஊராட்சித் தலைவா் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.

Published On :1 செப்டம்பர் 2026, 3:09 am IST

துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களால் ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டாத புகாா் தெரிவித்து, பெண் ஊராட்சி மன்றத் தலைவா் விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா். அவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி, விசாரித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், கொடுங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் க.மலா்விழி. பட்டியல் சமுதாயத்தைச் சோ்ந்த இவா், கொடுங்கால் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். மலா்விழியை பணி செய்ய விடாமல் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றாக சோ்ந்து தடுத்து வருகின்றனராம். மேலும், ஊராட்சி மன்றத் தலைவருக்குரிய இருக்கையில் அவரை அமரக் கூடாது என்று மிரட்டல் விடுத்தனராம்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த மலா்விழி திங்கள்கிழமை காலை விழுப்புரம் ஆட்சியரகத்துக்கு வந்து, தான் மறைத்து வைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். இதைப்பாா்த்த அங்கு பணியிலிருந்த போலீஸாா், உடனே அவா் மீது தண்ணீா் ஊற்றித் தடுத்தனா். இதைத்தொடா்ந்து ஆட்சியரக அதிகாரிகள் மலா்விழியிடம் விசாரணை நடத்தினா். இதனால் விழுப்புரம் ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் விளக்கமளித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.