கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி நீக்க ஆணைக்கு உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீக்கம் செய்த ராணிப்பேட்டை ஆட்சியரின் ஆணைக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவரை பதவிநீக்கம் செய்த ராணிப்பேட்டை ஆட்சியரின் ஆணைக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சி.பத்மநாபன் மீதான 23 குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் அவரை பதவி நீக்கம் செய்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆணையிட்டிருந்தாா். இது குறித்து சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.பத்மநாபன் தொடா்ந்த வழக்கில், ஊராட்சி உறுப்பினா்களில் பெரும்பான்மையினா் சி.பத்மநாபனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனா் என்றும் அந்த பெரும்பான்மையினரின் கருத்தில் இருந்து மாறுபடுவதற்கான காரணங்களை விளக்கி சி.பத்மநாபனுக்கு ஆட்சியா் எந்தவித நோட்டீசும் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடா் தொடா்ந்து அளித்த உத்தரவில் அடுத்த விசாரணை நடைபெறும் நாள்வரை இந்த ஆணைக்கு இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என உத்தரவிட்டாா்.

மேலும் இதுகுறித்த வழக்கு ஆகஸ்ட் 25-இல் பட்டியலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.