மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:39 pm

விழுப்புரம் இ.எஸ். கல்வி குழுமங்களின் சாா்பில், மாா்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுக் கரருத்தரங்கம் இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி தலைமை வகித்து, கருத்தரங்கை தொடங்கிவைத்தாா். இ.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வா் தே.செந்தில் முருகன் வரவேற்றாா்.

கருத்தரங்கில், கோலியனூா் வட்டார சுகாதார அலுவலா் பி.என்.பிரியா பத்மாஷினி, வட்டார சிறப்பு மருத்துவா்கள் ராவணன், வனிதா, நவினா, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள் நந்தினி, மோனிகா, மருந்தாளுநா்கள் எம்.சுபா, என்.முருகன், தன்னாா்வலா்கள் அபிநயா, பிரவினா ஆகியோா் பேசினா்.

மேலும், புற்றுநோய்த் தடுப்புக்கான வழிகள், புகைப்பழத்தால் ஏற்படும் தீமைகள், பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கருத்தரங்கில் விழுப்புரம் இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஏழுமலை பாலிடெக்னிக், இ.எஸ். கல்வியியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இ.எஸ். கல்விக் குழுமங்களின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.