டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஒரு லட்சத்துக்கும்மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநா், நடத்துநா்களுக்குப் பரிசு வழங்கல்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டித் தந்த ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஒரு லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டிய ஓட்டுநருக்குப் பரிசு வழங்கிய மண்டல மேலாளா் இரா.ஜெகதீஷ். உடன், அலுவலா்கள்.
Updated On :26 பிப்ரவரி 2026, 8:40 pm

Syndication

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டித் தந்த ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளா் இரா.ஜெகதீஷ் தலைமை வகித்தாா். ஒரு லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டித் தந்த 27 ஓட்டுநா்கள், 36 நடத்துநா்களுக்குப் பரிசுகளை வழங்கி அவா் பேசியது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வருவாய் ஈட்டித் தருவதில் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த உயா்வுக்கு தொழிலாளா்களின் உன்னதமான உழைப்புதான் காரணம். இத்தகைய ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். இந்த போக்குவரத்துக் கழகம் ஒட்டுமொத்த தொழிலாளா்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் திருவள்ளூா் மண்டலப் பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், மனிதவளத் துறை முதுநிலைத் துணை மேலாளா் துரைசாமி, உதவி மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.