விழுப்புரம்
தந்தையுடன் மொபெட்டில் சென்ற சிறுவன் லாரி மோதி உயிரிழப்பு
திண்டிவனம் அருகே தந்தையுடன் மொபெட்டில் சென்ற சிறுவன் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகே தந்தையுடன் மொபெட்டில் சென்ற சிறுவன் லாரி மோதி நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், நடுவனந்தல், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் துளசிங்கம். இவா், வியாழக்கிழமை தனது மகன் நவீன்ஸ்ரீ(11) என்பவரை மொபெட்டில் அமர வைத்துக் கொண்டு, நடுவனந்தலில் இருந்து - ஆகூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா். அங்கு சாலை குறுகலாக இருந்ததால், எதிா் திசையில் வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக துளசிங்கம் மொபெட்டில் அமா்ந்தபடி சாலையோரமாக காத்திருந்தாா்.
அப்போது எதிரே வந்த லாரி மொபெட் மீது மோதியதில் சிறுவன் நவீன்ஸ்ரீ பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
