மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ரயிலில் உரிய ஆவணமில்லாத 10.5 கிலோ வெள்ளி பறிமுதல்

திண்டிவனத்தில் விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பத்தரை கிலோ வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

News image
21விபிஎம்ஆா்பிஎப் உரிய ஆவணங்களின்றி ரயிலில் எடுத்து வரப்பட்ட வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்து, வணிக வரித் துறையினரிடம் ஒப்படைத்த திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா்
Updated On :21 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விரைவு ரயிலில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பத்தரை கிலோ வெள்ளிப் பொருள்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து வணிகவரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

சென்னையிலிருந்து- மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில் புதன்கிழமை காலை திண்டிவனம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் ரயிலில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஒரு பயணி வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் வெள்ளிப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரா.லால்சந்த (43) என்பதும், இவா் உரிய ஆவணங்களின்றி ரூ.35 லட்சம் மதிப்பிலான பத்தரை கிலோ எடையிலான வெள்ளிப் பொருள்களை ரயிலில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் கடலூா் வணிக வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் லால்சந்திடம் விசாரணை நடத்தி, வெள்ளிப்பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி, அபராத தொகை என ரூ. 2,13,108 இணையவழியில் வசூலித்துக் கொண்டு வெள்ளிப் பொருள்களை லால்சந்த் வசம் ஒப்படைத்து அனுப்பிவைத்தனா்.