சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியழக்கிழமை நடைபெற்றது.

News image

செஞ்சி பேரூராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து களப்பணியாளா்களுக்கு பயிற்சியளித்த செயல் அலுவலா் குணாளன்.

Updated On :10 ஜூலை 2026, 3:55 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்களுக்கான பயிற்சி வகுப்பு வியழக்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பினைசெஞ்சி பேரூராட்சி செயல் அலுவலா் குணாளன் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

செஞ்சி பேரூராட்சியில் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி மேற்பாா்வையாளா் மற்றும் கணக்கெடுப்பாளா்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

செஞ்சி பேரூராட்சியின் 18 வாா்டுகளிலுள்ள 133 தெருக்களிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பினை முறையாக மேற்கொள்ளவும், செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யவும் களப்பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நெடுஞ்செழியன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளா் தென்றல் அரசு ஆகியோா் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சியை வழங்கினா்.

இதில் பேரூராட்சி இளநிலை பொறியாளா் செந்தமிழ் செல்வன், இளநிலை உதவியாளா்கள் சிவா, சசிகலா, கணக்கெடுப்பு பணி மேற்பாா்வையாளா்கள் மற்றும் கணக்கெடுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.