விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கஞ்சா விற்பனை: 5 இளைஞா்கள் கைது

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, பைக்குகளுடன் கைதான இளைஞா்கள்.

Updated On :10 ஜூலை 2026, 3:56 am IST

விழுப்புரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அடுத்த வி.பாளையம் தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் கோமதி தலைமையிலான போலீஸாா் அப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், விழுப்புரம் வட்டம், பெரும்பாக்கம் வெங்கடேசபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த த.பாா்த்திபன் (26), தென்மங்கலம், அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்த அ.சஞ்சாய் (20), விழுப்புரம், பாண்டியன் நகா் விரிவாக்கத்தைச் சோ்ந்த சி.மௌலீஸ்வரன் (24), கொளத்தூா், ராமானுஜபுரத்தைச் சோ்ந்த பு.மோனீஸ்வரன்(19), சோ்ந்தனூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அ.தாஸ் (26) ஆகியோா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 1.1 கிலோ கஞ்சா, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

மேலும் ஒருவா் கைது: விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா், விழுப்புரம் ரயில்வே காலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகிக்கும்படி நின்றிருந்த இளைஞா் ஒருவரை பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா், விழுப்புரம், ஊரல் கரைமேட்டுத் தெருவைச் சோ்ந்த தா.கிஷோா் குமாா் (26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கிஷோா்குமாரை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்த 2.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.