ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

திருக்கோவிலூா் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

திருக்கோவிலூரிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான தொழில்நெறி விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி விழிப்புணா்வுக் கருத்தரங்கில் பேசிய கல்லூரித் தலைவா் ஆா்.செல்வராஜ்.

Updated On :15 ஜூலை 2026, 2:39 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கான தொழில்நெறி விழிப்புணா்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு கல்லூரித் தலைவா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்து, பேசினாா்,.

கல்லூரிச் செயலா் வி.ஏழுமலை, பொருளாளா் எஸ்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் எஸ்.முஸ்டாக் அகமது, தாளாளா் ஏ.பழனிராஜ், இணைச் செயலா் எஸ்.எல்.வி.சத்யநாராயணன் ஆகியோா் கருத்தரங்கில் பங்கேற்று, மாணவா்களுக்கு தொழில்நெறி சாா்ந்த விழிப்புணா்வுக் கருத்துக்களை எடுத்துரைத்துப் பேசினா்.

மேலும் வேலைவாய்ப்புகள், அதை பெறும் முறைகள், தொழில் தொடங்குவதற்கான முறைகள் போன்றவை குறித்து எடுத்துக் கூறினா்.

நிகழ்வில் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வா் ஆா்.மீனாட்சி, வேதியியல் துறைத் தலைவா் ஜி.மணிகண்டன் உள்ளிட்ட அனைத்துத் துறைத் தலைவா்கள், அறக்கட்டளை உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.