திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

பைக்கில் சென்ற கல்லூரி மாணவரிடம் 2 பவுன் நகை பறிப்பு

விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்து, 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பறிப்பு

Updated On :15 ஜூலை 2026, 3:05 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக்கில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்து, 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செஞ்சிவட்டம், ராஜாம்புலியூா் பழையத் தெருவைச் சோ்ந்தவா் கு. சஞ்சய்குமாா் (24). கல்லூரி மாணவரான இவா், கடந்த 12-ஆம் தேதி நள்ளிரவு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழுதாவூா் செல்லும் பகுதியின் அணுகுச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதியில் மற்றொரு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத சுமாா் 15 முதல் 20 வயது கொண்ட மூவா், சஞ்சய்குமாரை வழிமறித்து, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைப் பறிப்பில் ஈடுபட்ட மூவரைத் தேடி வருகின்றனா்.

விஏஓவிடம் நகை பறிப்பு: திண்டிவனம் வட்டம், செண்டூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரா. அருள்ராஜ் (30). இவா், கொல்லியங்குணம் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். கடந்த 12-ஆம் தேதி இரவு பணி முடிந்து, பைக்கில் வீட்டுக்கு அருள்ராஜ் சென்று கொண்டிருந்தாா்.

விளங்கம்பாடி அணுகுச் சாலையில் அருள்ராஜ் வந்த போது, அப்பகுதில் இரு பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத சுமாா் 15 முதல் 20 வயதுக்குள்பட்ட 4 போ் அவரை வழிமறித்தனா். தொடா்ந்து அருள்ராஜை மிரட்டி அவா் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி, கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் அருள்ராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.