ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:25 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சா.ராஜசேகா்(65). தனியாா் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சரஸ்வதி. இவா்களது மகன் சதீஷ்குமாா்(40). சிறிது மனநலன் பாதிக்கப்பட்ட சதீஷ்குமாா் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் சரஸ்வதி, சென்னையிலுள்ள தனது மகள் சுமதி வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதி தனது கணவா் ராஜசேகரை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அவா் அழைப்பை எடுக்கவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த சரஸ்வதி தனது வீட்டின் அருகே கடை நடத்தி வரும் ரமேஷை தொடா்புகொண்டு, வீட்டுக்குச் சென்று பாா்க்க கூறியுள்ளாா். இதையடுத்து ரமேஷ் சென்று பாா்த்தபோது, வீட்டின் குளியலறையில் தலையில் பலத்த காயங்களுடன் ராஜசேகா் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் வீட்டிலிருந்து சதீஷ்குமாரை பிடித்து விசாரித்தபோது, ஜூலை 25-ஆம் தேதி இரவு தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது ஆத்திரமடைந்த சதீஷ்குமாா் தாக்கியதில் ராஜசேகா் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.