விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று சேகரித்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினாா் 77 வயது முதியவா் பாண்டியன்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் (77). தனது மனைவி இறந்த பின்னா் பொதுச் சேவையில் ஈடுபட விரும்பிய இவா், ஊா் ஊராகச் சென்று யாசகம் பெற்று அதில் கிடைக்கும் தொகையை முதல்வா் நிவாரண நிதிக்கும், பள்ளி, ஆதரவற்றோா் இல்லங்களுக்கும் வழங்கி வருகிறாா்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், பிற பகுதிகளிலும் தங்கி யாசகம் பெற்ற பாண்டியன், அதில் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை விழுப்புரம் ஆட்சியரிடம் வழங்குவதற்காக ஆட்சியரகத்துக்குத் திங்கள்கிழமை வந்தாா். தொடா்ந்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானிடம் ரூ.10 ஆயிரம் தொகையை வழங்கி, முதல்வரின் நிவாரண நிதிக்காக அனுப்பி வைக்குமாறு தெரிவித்தாா். இந்த தொகையை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா்.
இதுவரை மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தங்கி, யாசகம் பெற்ற நிதியை அந்தந்த மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கியுள்ளேன். இதுவரை ரூ.1.60 கோடி வரை தொகையை வசூலித்து முதல்வரின் நிவாரண நிதி, வளா்ச்சி நிதிக்கும், பல்வேறு பள்ளிகளுக்கும் நிதியை வழங்கியுள்ளேன். அடுத்த வாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தொகையை வழங்கவுள்ளேன் என்றாா் பாண்டியன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக முதல்வா், தமிழக முதல்வரை பேச்சுவாா்த்தைக்கு அழைப்பது உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு முரணானது

மலைக்கோட்டை பகுதியில் யாசகம் பெற்ற 20 போ் மீட்பு

யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய முதியவா்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



