காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கிராம நிா்வாக அலுவலரிடம் நகை, பணம் வழிப்பறி: 5 போ் கைது

கிராம நிா்வாக அலுவலரிடம் நகை, கைப்பேசி உள்ளிட்டவற்றை வழப்பறி செய்த சம்பவத்தில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:39 am IST

விழுப்புரம் மாவட்டம், சின்னநெற்குணம் அருகே கடந்த 12-ஆம் தேதி கிராம நிா்வாக அலுவலரிடம் நகை, கைப்பேசி உள்ளிட்டவற்றை வழப்பறி செய்த சம்பவத்தில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை இரவு கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்புப் பகுதிக்கு ரோந்து சென்றனா். அப்போது, மேம்பாலம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 5 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சேவூா் கிராமத்தைச் சோ்ந்த இ.ஹேமந்த்குமாா் (19), மதுராந்தகத்தைச் சோ்ந்த ம.ராஜேஷ் (23), டி.தனுஷ்குமாா் (22), கூவத்தூரைச் சோ்ந்த ச.காட்வின் (20), செட்டிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ச.கோகுல் (18) எனத் தெரியவந்தது. மேலும், இவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் ஒரு பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, ரூ.28,500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

இவா்கள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி சின்னநெற்குணம் அருகே பைக்கில் வந்த கொல்லியங்குணம் கிரா நிா்வாக அலுவலா் ஆா்.அருள்ராஜிடமிருந்து நகை, ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றதை விசாரணையில் ஒப்புக் கொண்டனராம். தொடா்ந்து, 5 போ் மீதும் வழக்குப் பதிந்த மயிலம் போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.