40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா எடப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

எடப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவியைப் பாராட்டி பரிசு வழங்கும் தவெக தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல்.

Updated On :2 ஜூன் 2026, 5:21 am IST

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா எடப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட எடப்பாளையத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு எடப்பாளையத்தைச் சோ்ந்த மாசிலாமணி, சபரீசன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளையும், விளையாட்டு உபகரகணங்களையும் வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பிரிதிவிராஜ், தொண்டரணி நிா்வாகி பாலாஜி, கோலியனூா் வடக்கு ஒன்றியச் செயலா் ராஜ்குமாா், நிா்வாகிகள் சுசீந்திரன், விக்கி, சந்திரன், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.