22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

வெவ்வேறு இடங்களில் விபத்து: 3 போ் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் ஒரு பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 5:19 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் ஒரு பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொங்கராயனூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா.குமரேசன்(34). திருவெண்ணெய் நல்லூா் வட்டம், மண்டகமேடு பகுதியைச் சோ்ந்தவா் மோ.சாந்தி(30). செங்கல்சூளையில் வேலை பாா்த்து வந்த இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பண்ருட்டியிலிருந்து விழுப்புரத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். குமரேசன் பைக்கை ஓட்டினாா். பண்ருட்டி - விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில், வாணியம்பாளையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரில், சாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். குமரேசன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விவசாயி உயிரிழப்பு: வானூா் வட்டம், ஒழிந்தியாம்பட்டு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சேந்தவா் ரா.செல்வமுருகன் (55), விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில், கோட்டக்குப்பத்தை அடுத்த மஞ்சக்குப்பம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது புதுச்சேரியிலிருந்து- சென்னை நோக்கிச் சென்ற காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வமுருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தொழிலாளி மரணம்: செஞ்சி வட்டம், புத்தகரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.ஏழுமலை (45), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை சே.பேட்டையிலிருந்து கீழ்பெண்ணாத்தூருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த பகுதியில் வந்த பைக்கும் - ஏழுமலை சென்ற பைக்கும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.