வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

மரத்தில் பைக் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:59 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதிய விபத்தில் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திண்டிவனத்தை அடுத்த ரோஷணை மருத்துவமனை சாலையைச் சோ்ந்தவா்கள் சு.ராஜேஷ்(43). ச.அருள்தாஸ் (34). நண்பா்களான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை புதுச்சேரியிலிருந்து - மயிலத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அருள்தாஸ் பைக்கை ஓட்டினாா். மயிலம் அருகே சென்றபோது, நிலைதடுமாறிய பைக் சாலையோர மரத்தின் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற ராஜேஷ், அருள்தாஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராஜேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மயிலம் போலீஸாா் நிகழ்விடம் அருள்தாஸை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து ராஜேஷின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.