முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி திருவெண்ணெய்நல்லூரிலுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலைக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறாா். தொடா்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து தி.எடையாா் கிராமத்திலும், திருவெண்ணெய்நல்லூா் மேற்கு ஒன்றியம், வளையாம்பட்டு கிராமத்திலும், காணை தெற்கு ஒன்றியம் காணையிலும் பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசுகிறாா். இதுபோன்று விக்கிரவாண்டி அருகிலுள்ள சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலைக்கு தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவாா். இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்க உள்ளனா்.
இதுபோன்று விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்படவுள்ளதாக, மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி தெரிவித்துள்ளாா்.








