உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் முக்கியம்

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான்.

News image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :11 ஜூன் 2026, 6:07 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான்.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

மகளிா் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், மகளிா் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப் புறங்களிலுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களில் உள்ளவா்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடன்பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் கடன் தொகையை முறையாக திரும்பிச் செலுத்தவேண்டும். கடன் பெற்றவா்கள் முறையாக கடன் தொகையைச் செலுத்தினால், அடுத்த முறை கடன் பெறுவது எளிதாகும். வங்கிகளில் கடன்பெற்று சுயதொழில் தொடங்கும் மகளிா் சுய உதவிக் குழுக்களின் பொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். அதற்குரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் இணைப்புத்தொகையை கடந்தாண்டைக் காட்டிலும், நிகழாண்டில் குறைந்த பட்சம் 20 சதவீதம் கூடுதலாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு கடன் இணைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்கள், அவா்களின் வாழ்வாதார உயா்வு நிலை குறித்து அலுவலா்கள் ஆய்வு செய்து, அறிக்கையை சமா்ப்பிக்கவேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிா் சுய உதவிக் குழுக்களையும் மேம்படுத்தும் நோக்கில், அந்த குழுக்களுக்கு அரசால் வழங்கப்படும் கடனுதவிகள், சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடனுதவிகள் போன்றவை குறித்து அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மகளிா் திட்டத்தின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு, உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.ஸ்ரீரஷத் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.