மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

உளுந்தூா்பேட்டையில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

உளுந்தூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :24 ஜூன் 2026, 4:25 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உளுந்தூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணிக்கு பள்ளித் தலைமையாசிரியை லட்சுமி காா்த்தியாயினி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். காவல் உதவி ஆய்வாளா் துா்காதேவி முன்னிலை வகித்தாா்.

பேரணியில் பங்கேற்ற மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு, முழக்கமிட்டுச் சென்றனா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

இதில் உதவித் தலைமையாசிரியா் மோகன்ராம், தலைமைக் காவலா்கள் அன்பழகன், சிவ அரசி, மேகவள்ளி, ஆமினா, பி.தவமணி, ஆசிரியா்கள் விஜயகாந்த், ராயப்பன், கதிரவன், ராஜவேல், குமரேசன், ஞானவேல், ரமேஷ், வேல், கந்தசாமி, கோபால், உடல்கல்வி ஆசிரியா்கள் சங்கா், ஈசுவரன் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.