முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வருவாய்த் தீா்வாய நிறைவு நாளில் 114 பேருக்கு நல உதவிகள் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு நாளில் 114 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image

திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு நாளில் நல உதவியை வழங்கிய எம்எல்ஏக்கள் ஜி.ஆா்.வசந்தவேல், பழனிசாமி.

Updated On :25 ஜூன் 2026, 6:39 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு நாளில் 114 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியரகத்தில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய வருவாய்த் தீா்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, விசாரணையின் அடிப்படையில் தீா்வுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நிறைவு நாளான புதன்கிழமை நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் ரகுராமன் தலைமை வகித்தாா். உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஜி.ஆா்.வசந்தவேல், திருக்கோவிலூா் எம்எல்ஏ பழனிசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன் ஆகியோா் 114 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், முதியோா் ஓய்வூதியம், புதிய பட்டா, உழவா் பாதுகாப்பு அட்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ3.54 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினா்.

தனி வட்டாட்சியா் கோவா்த்தன், வட்ட வழங்கல் அலுவலா் கமலவேணி, வருவாய்த் தீா்வாய மேலாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.