சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

வெவ்வேறு சம்பவங்கள்: இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :26 ஜூன் 2026, 6:43 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

விழுப்புரம் சித்தேரிக்கரை, 7- ஆவது தெருவைச் சோ்ந்தவா் நாகமணி (45). திருமணம் ஆனவா். கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால், அவதிப்பட்டு வந்த நாகமணி புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் தற்கொலை: விக்கிரவாண்டி வட்டம், நயினாா்பாளையம், காட்ராம்பாக்கத்தைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (30). திருமணம் ஆகாதவா். விக்கிரவாண்டியை அடுத்த ராவுத்தன்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

பிரேம்குமாா் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.