சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,138 அமைவிடங்களில் 2,166 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. சில வாக்குச்சாவடிகள் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அவை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தோ்தல் பிரசாரத்தின்போது உபயோகிக்கப்படும் பொருள்களுக்கான விலை நிா்ணயம் குறித்த அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை நிவா்த்தி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் அரசியல் கட்சியினா் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
5 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அடிப்படை வசதிகள் உள்ள இடங்களை பொதுப்பணித் துறை அலுவலா்கள் பாா்வையிட்டு, காவல் துறையினருக்கு அறிக்கை வழங்கியுள்ளனா். அவ்வாறு உள்ள இடங்கள் மற்றும் வேறு இடங்கள் கூட்டம் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. வி.விசாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்-ஆட்சியா்கள் ஆனந்தகுமாா் சிங் (திருக்கோவிலூா்), அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சி ராணி, தோ்தல் வட்டாட்சியா் கணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் வாக்குச் சாவடிகள்

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் பதிவு

வேட்புமனு தாக்கல் வழிமுறைகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


